09 Sept 2010, Thursday
வழக்கமான வார நாளின் ஒரு நாள், புதிய பணி, புதிய இடம், புதிய அலுவலக நண்பர்கள், சவாலான வேலை... புதிய பணியின் காரணமாக புதிய விஷயங்களில் அதிக ஆர்வம், மனதளவில் பெரிய மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருன்தது. இருபினும் என் நண்பர்களின் நினைவுகள் எப்போதும் போலவே என் மனதில்....
அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல நான்கு சக்கர வாகனம் என் அறை வந்து அடைந்தது. அதிகாலை நேரம், நெரிசல் அற்ற அகன்ற சாலைகள், இதமான மெல்லிய ஈர காற்று... வாகனத்தில் மெல்லிய ஒலியில் மனதை வருடும் திரைப்படப் பாடல்... மனதுக்கு மிக இதமாக.
“மந்திர புன்னகையோ, மஞ்சள் நிலவோ கண்ணே... கண்ணே...”
பின் இரவில் நான் என் அக்காவுடன் கைப்பேசியில் உரையாடிய விஷயங்கள் என் நினைவில். ஆம், என் அக்கா, கூடப் பிறந்தவளோ, பெரியப்பா மகளோ, சித்தப்பா மகளோ என ஐயம் வேண்டாம். கூடப் பிறந்தால் தான் அக்கா என்று அழைக்க வேண்டுமா? நான் அப்படி கருதவில்லை.
அவளுக்கும் எனக்கும் இடையான அறிமுகம் 28 Feb 2010, ஞாயிற்றுக் கிழமை, மாலை நிகழ்ந்தது. மிக சரியாக சொன்னால் 221 நாட்களாக அவள் என்னுடன் அருகாமையில் வசித்து வந்தாள். குறுகிய காலமாக இருந்தாலும் எங்களுக்கு இடையான புரிதல், அன்பு, இறுக்கம் அசாதாரமானதாக இருந்தது, இருக்கின்றது.
அவளின் நினைவுகள் இப்போது வந்த காரணம், என செவிகளை வந்து அடைந்த பாடல் வரிகள்.
அலுவலகம் சென்று அடைந்து, என் பணிகளை செய்துகொண்டிருந்தேன். என் அக்காவின் நினைவுகள் அலுவலக வேலையின் காரணமாக அந்நியமாக தள்ளி இருந்தது.
அலுவக நண்பனின் கைப்பேசி அழைப்பு.
“கமல், check your mail box”
“சரி”. அழைப்பு துண்டிக்கப்பட்டது.
என் மின் அஞ்சலை திறந்து பார்க்க, இன்பமான அதிர்ச்சி. என்னை, அலுவலக வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்லும் படியான செய்தி. கிட்ட தட்ட ஒரு மாத காலம் அங்கு தங்கும் படியான சூழல்.
இந்த செய்தியை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் விருப்பத்துடன், என் தேவைகளுக்கான பொருட்களை சேகரிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். உறவுகளிடம் கேட்டாலும் கிடைக்காத ஒத்துழைப்பு, நண்பர்களிடத்தில் கேட்காமல். அவகளின் அன்பில், பாசத்தில், பண்பில், ஒத்துழைப்பில் திக்கு முக்காடிப் போனேன்.
நான் ஆஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது, அனைத்து நண்பர்களும் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர். அவர்களின் பிரிவை 30 நாட்கள் எப்படி சமாளிப்பது என்பதை அறியமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். மேலும் அக்காவை நேரில் காண இயலவில்லை என்ற மன வருத்தம்.
விமானம் மெல்ல மெல்ல மேல செல்ல, எங்கும் அமைதி. நான் என் நண்பர்களின் நினைவில்...
நேரம் கடந்து கொண்டிருந்தது, கடந்து போன நேரம் தெரியவில்லை, அதை அறிய முற்ப்படவும் இல்லை.
விமான ஓட்டுனரின் அறிக்கை –
“Dear passengers, due to technical problem the flight is landing at Andaman. It takes 4 to 5 hr to resolve the problem. Until that passengers will be given proper accommodation & food by the management. If passenger wishes they can hang out. Delay can be kindly regretted.”
அனைத்து பயணிகளும் சற்றே வெறுப்புடன், சிற்சில முனகலுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். எனக்கோ இன்ப அதிர்ச்சி, ஆம் என் அன்பு அக்கா இங்கு தான் வசித்து வருகிறாள். அவளை பார்த்து சரியாக 62 நாட்கள் கடந்து போயிற்று. நான் ஆவலுடன் என் கைப்பையில் உள்ள தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு விமான நிலையம் விட்டு வெளி வந்தேன்.
மூன்று சக்கர வகானம் பிடித்து அவள் வீடு செல்ல முனைந்தேன். சற்றே சிரமத்திற்கு உள்ளானனேன். நான் பேசும் மொழியை அவன் புரிந்து கொள்ளவில்லை. பின் ஏதோ எனக்கு தெரிந்த ஹிந்தி பேசி சமாளித்தேன்.
20 நிமிடப் பயணம்... என் மனம் என் வசம் இல்லை. எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் – “ஆக்க பொறுத்த சாமிக்கு ஆற பொறுக்கல”. ஆம், இப்போது என் நிலையும் அதுதான். வீடு சென்று சேர்ந்தேன். அவள் மாடி வீட்டில் உள்ளாள். நான் மிக மெதுவாக சென்று, அழைப்பு மணியை அழுத்த...
“koun”
நான் அமைதி காக்க, அவள் எட்டிப் பார்த்து இன்ப அதிர்ச்சியுற்றாள், நானும்.
சுற்றத்தினை இருவரும் பொருட்படுத்தவில்லை, இருவரும் கட்டி அனைதுக்கொண்டோம். இருவரும் நேற்றிலும், கன்னங்களிலும் முத்தங்களை பரிமாறிக்கொண்டோம்.
எது அவசியம்? எல்லாம் அவ்வளவு தெளிவாகத் தெரிந்து விடுவதில்லை. ஆனால் அந்தந்த சமயங்களுக்குக் என்ன செய்கிறோமோ அதெல்லாம் அவசியம். பிடிதமிலாதவைகளைக் கூடச் செய்கிறோம். அதைச் செய்து பிடிதமான, அவசியமான, பெரியது ஒன்றை அடைய... (விடுதலை – குறுநாவல், புதுமைப்பித்தன்).
கவி வைரமுத்துவின் வரிகள் என் நினைவில் –
சொல்லின் அர்த்தம் தீர்மானிப்பது சொல் அல்ல – இடம்.
ஒரே ஒரு முத்தம் கொடு – இந்தத் தொடருக்குக் கட்டிலில் பொருள் வேறு, தொட்டிலில் பொருள் வேறு, பாடையில் பொருள் வேறு.”
ஆம், எங்கள் செயலில் சிறுதுளியும் கொச்சையான எண்ணங்கள் இல்லை.
நான் உணர்ந்த விஷயங்கள் மூன்று – 1.அன்பு 2.நேசம் 3.பாசம்
முத்தம் அன்புடன் கொடுக்க பட வேண்டும், அன்புடன் பெறப்பட வேண்டும்.
மார்தியின் “எளிய கவிதைகள்” வரிகள் –
“வெயில் பட்ட செம்பாய்க் கொதித்தது அவள் நெற்றி
விடை பெறக் கடைசியாய் நான் முத்த்தமிட்ட பொழுதில்
வாழ்நாள் முழுவதும் வெறித்தனமாக
நான் நேசித்தது – அந்த நெற்றி ஒன்று தானே...!!! “
பின், வழக்கமான உரையாடல்கள், செல்ல சண்டைகள் என நேரம் கடந்து கொண்டிருந்தது. நான் அவளின் மடியில் படுத்துகொண்டிருக்க, அவளின் கைகள், என் தலை கேசத்தை அன்புடன் வருடிக்கொண்டிருந்து.
மீண்டும் ஒரு முறை மார்தியின் “எளிய கவிதைகள்” வரிகள் –
“துயர் படவும் தாங்கவும் செய்கிறாய் எனக்காக
பரந்த உந்தன் மடியில் விட்டுச் செல்கிறேன் எந்தன்
ஒவ்வொரு காயத்தையும் ஒவ்வொரு அடியினையும்
வலி மிகு ஆழ்ந்த அன்பினையும்...!!!”
எங்களின் உரையாடல், எங்கள் நண்பர்கள், அவர்களை பற்றிய விஷயங்களாகவே இருந்தது, நேரம் கடந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் செல்ல, அக்கா எனக்கு பிடித்த தக்காளி சட்னி மற்றும் தோசையுடன் வந்தாள். நான் சாப்பிட, அதிதமான அன்புடன், எனக்கு ஊட்டியும் விட்டாள்... அவளின் அன்பை என்வென்று நான் உரைக்க....
கடல் போன்று மிக ஆழமானது என்றா?
நீல் வானம் போன்று மிக பரந்தது என்றா?
மழை போன்று பொழிவது என்றா?
தெரியவில்லை... புரியவுமில்லை...
நேரம் ஆயிற்று. விமான நிலையம் செல்ல முற்பட, என் நெற்றியில் திருநீர் இட்டு, அவளும் என்னை வழி அனுப்ப விமான நிலையம் வந்தாள். மீண்டும் ஒரு முறை நெற்றியில் முத்தம் இட்டாள்.
விமானம் மெல்ல மெல்ல மேல செல்ல, எங்கும் அமைதி. நான் என் நண்பர்களின் நினைவில்... நான் எப்போதோ வாசித்த வாசகம் -
காலத்தின் கட்டாயம் என்னை
கலங்கவைக்க வேண்டுமென்று
அழுகிறேன் மனதிற்க்குள்
அன்பு நண்பர்களே உங்களை எப்படி பிரிவது
உயிர் பிரிவதை போன்று உணர்கிறேன்
உங்களை பிரியும்போது
எப்பொழுதும் சிரிக்கும் நான்
இப்பொழுது அழுகிறேன்
என்னுயிர் நண்பர்கள்
என்னைவிட்டு செல்கிறார்கள்
தடுக்கவும் வழிஇல்லை வழியனுப்பவும் மனமில்லை
கனத்த மனதோடும் கண்ணீரோடும் திரும்பி வருகிறேன்
என் வாழ்க்கை பயணத்தை தொடர...
No comments:
Post a Comment