
அக்காவுக்கு ஒரு சேலை வாங்கும் பொருட்டு நானும் என்னுடைய நண்பர்களும் கடை வீதி சென்று இருந்தோம். எனக்கு இது புதிய அனுபவம், விஷயம். என்னுடைய தோழிகள் அந்த வேலையை செம்மையாக செய்து கொண்டு இருந்தனர். வெகு நேரம் ஆயிற்று ஒரு சேலையை தேர்வு செய்ய.
நல்ல வேலையாக, சேலை தேர்வு முடிவுற்றது. அனைவரும், உணவகத்தில் உணவு அருந்திவிட்டு தங்கும் இடம் வந்து சேர்ந்தோம்.
வேலை தந்த அசதி, அலைச்சல், நல்ல உறக்கம் தேவைப்பட்டது. கேட்டுக் மெல்லிசை கொண்டே கண் அயர்தேன். எப்போது உறங்கினனேன் என்று தெரியவில்லை.
விடியற்காலை, விசாலமான பெரிய அறை, என் காதுகளை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் சுப்ரபாதம் வந்து அடைந்தது, ஒலித்தது. காலை நேர பரபரப்பு...
என் மடியில் அதிகாலை சோம்பலுடன், மிக அதிதமான அன்பு மற்றும் உரிமையுடன் என் தோழி, சகோதரி, மூத்த மகள், லக்ஷ்மி...
என் மகன், என் தோழியிடம்,
“ நீ எந்திரி, இது எங்க அப்பா, நா தூங்க போறேன்”
“ போடா, இது எங்க கமல்”
செல்ல சண்டை அவர்களுக்குள், நான் ரசித்துக்கொண்டிருக்க,
தோழன் செந்தில் என்னிடம்,
“கமல், அம்மா (கமல்) ஊர்லேந்து வாராங்கலாம், நான் கார் எடுத்து போயிட்டு அழைச்சுட்டு வந்துரேன்”
“எப்படா சொன்னாங்க?”
“உனக்கு போன் செஞ்சகலாம், not reachable la இருந்தியாம், அதான் எனக்கு போன்ல சொன்னாங்க”
அப்போது, என்னவள், என்னிடம்
“நான் மார்கெட்க்கு போகணும், அக்கா காய்கறி வாங்கிவரச் சொன்னாங்க, அழைச்சுட்டு போங்க...”
“இல்ல, எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, இப்போ முடியாது”
“சரி, நான் செந்தில் அண்ணாவுடன் போறேன், செந்தில் அண்ணா, ரயில்வே ஸ்டேஷன் போற வழில என்ன ட்ராப் பண்ணிடுங்க, திரும்ப வரும் போது அழைச்சுட்டு போங்க...” என்றாள் மிக உரிமையுடன்.
“உன்ன அழைச்சுட்டு போக முடியாது” என்றான் கிண்டலுடன் செந்தில்.
அவன் வார்த்தைகளை என்னவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
தோழன் செந்தில் முன்னே செல்ல, அவள் பின் தொடர்ந்தாள்.
“மாமா, அம்மா இந்த பாடம் சொல்லிக் கொடுக்க மாட்றாங்க, நீங்க சொல்லிக் கொடுங்க” என்று கூறிக்கொண்டே என்னிடம் வந்தாள், என் அன்புத் தோழி செல்வியின் மகள்.
“வாடா செல்லம் நா சொல்லித் தரேன்” என்றேன் அவளை கட்டி அணைத்தபடி.
“அம்மா, காயத்ரி.... காயத்ரி...”
அதிகாலை நேர சோம்பலுடன், என் தோள்களில் சாய்ந்துக் கொண்டு,
“என்ன அண்ணா”
“இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் சொல்லு டா, அம்மா வாராங்க...”
“சரி”
அங்கு, என் மகளுக்கும் தோழி செல்விக்கும் வாக்குவாதம் –
“போ அத்த, நீ ஒன்னும் தல சீவிவிட வேண்டாம், நா லக்ஷ்மி அத்த கிட்ட போறேன்” என்று கோபித்துக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடினாள்.
“கமல், உங்களுக்கு ஆபீஸ்ல ஒரு மீடிங்னு சொன்னீங்கள, நீங்க என் பைக்ல போங்க. உங்க பைக்ல ஏதோ ப்ரோப்ளேம்ன்னு சொன்னீங்க, நா போற வழில சரி செஞ்சு evening எடுத்திட்டு வாறேன்” என்றார் அன்புத் தோழி செல்வியின் கணவர்.
அடுப்படியில் இருந்து சாந்தி அக்கா,
“கமல், இங்க வந்து பாரு, பசங்க அட்டகாசம் பண்றாங்க, என்னனு கேளு”
“நா சொன்ன கேட்கவா போறாங்க, சதீஷ், நீ போய் என்னு கேளு, நீ சொன்னாதான் பசங்க பயபடுவாங்க,கேட்பாங்க...”
அப்போது, அப்பா (செந்தில்) –
“கமல், பேரனுக்கு உடம்பு சுடுது, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போப்பா”
“சுபா, ஏன்? என்ன ஆச்சு? நேத்து ராத்திரி கூட நல்ல இருதான்ல”
“ஆமாண்ணா... இப்போ கொஞ்ச நேரமா உடம்பு சுடுது,”
லக்ஷ்மி இடைமறித்து, “ நீங்க ஆபீஸ் போங்க, நா ஆபீஸ் போகல, லீவ் சொல்லிருக்கேன், நான் அழைச்சுட்டு போறேன்”
சதீஷ், குழந்தைகளை சமாளித்து, காலை வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.
நான் ஆபீஸ் செல்ல முற்பட, அக்கா –
“டேய், சாப்பிட்டு போ, உட்காரு. எப்ப பாரு இதே வேலையா போச்சு உனக்கு” என்று மிக அன்பான, பொய்யான கோபத்துடன், தட்டில் இரண்டு தோசையுடன் எனக்கு பிடித்த தக்காளி சட்னியுடன் வந்தாள். அவளின் அன்பான வார்த்தைகள் என்னை சிதைக்க, நான் அமர்ந்தேன். அவள் மிக உரிமையுடன், மென்மையாக, வாஞ்சையுடன் என் கன்னங்களை தடவி விட்டாள்.
அப்போது, தோழன் செந்திலின் மகன் –
“பெரியப்பா, எனக்கு மம்மு” என்று கேட்டுக்கொண்டே, என் கழுத்தை கட்டிக்கொண்டு, முதுகில் தொற்றிக்கொண்டான்.
"இந்தாடா செல்லம், ஆ சொல்லு”
நான், அவனுக்கு உணவளித்துக் கொண்டும், சாப்பிட்டு கொண்டிருந்த போது, தோழன் செந்திலின் துணைவி,
“அண்ணா, நானும் இன்னைக்கு உங்ககூட வந்துரேன், என்ன ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடுங்க” என்றாள் உரிமையுடன்.
நான் தலை அசைத்தேன். அவளிடம் தட்டை நீட்டி,
“நீயும் எடுத்து சாப்பிடு. அக்கா இன்னம் இரண்டு தோசை...”
அவளும், தோசையை, சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மேலும்
“அக்கா, மூணு தோசை கொண்டு வாங்க, ரொம்ப பசிக்குது” என்றாள்.
செல்வி, என்னிடமும், செந்திலின் துணைவிடமும்
“இரண்டு பேரும், மறக்காம டைன்னிங் டேபிள் உள்ள லஞ்ச் பாக்ஸ்ச எடுத்திட்டு போங்க” என்றாள் அக்கறையுடன்.
கோவில் சென்று திரும்பிய அம்மா (செந்தில்), பாசத்துடன் அனைவருக்கும் திருநீர் பூசிவிட்டு, அலுவலகம் செல்ல தயராக இருந்த எனக்கும், சகோதரிக்கும் (செந்திலின் துணைவி) நெற்றியில் முத்தம் இட்டாள்.
“அம்மா, செல்வி எங்களுக்கு டீ போட்டு கொடும்மா” என்று கேட்டுக்கொண்டே வாக்கிங் போய் திரும்பிய அப்பா (கமல் & சதீஷ்) இருவரும்...
அப்போது, காலிங் பெல் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தேன், அது காலிங் பெல் சத்தம் அல்ல, என் கடிகார கதறல்...
நடந்தவை எல்லாம் கனவா? நனவானால் என்ன?
No comments:
Post a Comment