Tuesday, September 7, 2010

நான் கேவலமானவன்… சுயநலக்காரன்...!!!




24 July 2010, சனிக்கிழமை:


இனிய மாலை பொழுதில் நண்பனின் கைப்பேசி அழைப்பு...
“கமல், நாளைக்கு காலைல உதயதுல டிக்கெட் புக் பண்ணிருக்கேன்... வந்துரா”
"சரிடா... என்ன படம்”
“வாடா, என்ன சொன்ன தான் வருவியா? madarasappatinam.”
“கண்டிப்பா வாரேன்”
அதே சமயத்தில், இன்னொரு நண்பனின் குறுஞ்செய்தி –
“Dear mates, after watching movie, I’m going to take you all to a place. Pls do not ask where, but everyone has to come. Confirm me”
என் உதடுகளில் புன்சிரிப்பு. நான், என் நண்பர்களின் பகுதி அல்லவா, அவனுடைய விருப்பத்திற்கு இணைந்தேன், தலை அசைத்தேன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க போகும் எண்ணமே என் மனதில் சந்தோசத்தை அள்ளி தெளித்தது.

இரவு உணவை உட்க்கொண்டு, சந்தோசத்துடன் உறங்கச் சென்றேன்.



25 July 2010, ஞாயிற்றுக் கிழமை:


சூரியன் தன் கண்களை திறக்க, பறவைகளின் இனிய கூச்சல்கள் என்னை தட்டி எழுப்ப, நண்பர்களை காணப்போகும் இனிய இன்பத்தில், கண்கள் விரிக்க, கடிகாரம் மணி 6ஐ காட்டியது.

நிதானமாக, மெல்லிசை கேட்டுக்கொண்டு தயாரானேன், மனதில் சின்ன பேராசை. தோழிக்கு அந்த ஆசையை, ஆங்கிலத்தில் குருஞ்செய்தியாக அனுப்பியும் வைத்தேன்.

குருஞ்செய்தி:
Can you sit beside me and your hand on my hand throughout… Only if you wish, I don’t like to make my kid uncomfortable nor force her – 25 July 2010, 8:31:19
நான் அவளின் விருப்பு, வெறுப்புகளை நினைவில் கொல்லாமல் செய்தியை அனுப்பி வைத்தேன். அவளின் எண்ணம், பதில் இரண்டையும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டே காலை வேலைகளை செய்து முடித்துவிட்டு, தயாராகிக் கொண்டிருதேன்.

காது மிக கூர்மையாக தன் வேலையை செய்யும் முனைப்பில் காத்துக் கிடந்தது. பாவம் அதனால் தன் பணியை செய்ய இயலவில்லை. ஆம், திரையரங்கம் சென்று அடையும் வரையில் தன் பணியை செய்ய இயலவில்லை.

சின்ன ஏமாற்றம்.
சில குணங்களை எதிர்திடக் கூடாது, ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற எண்ணத்துடன் நானிருக்க... என் மீது எனக்கே சிரிப்பு, வெறுப்பு, கோபம், கலவையான உணர்வு, என்ன எது சிறு பிள்ளைத்தனமான ஆசை இதுவென்று?


திரையரங்கம்:
திரையரங்கம் சென்று அடைந்தேன். ஒவ்வொரு நண்பர்களாக திரையரங்கம் வந்தையடைய, உற்சாகம் பீரிட அரம்பதிதது, அனைவரின் முகத்திலும் உற்சாகம், களிப்பு...

திரை அரங்கினுள் அணைத்து தோழர், தோழிகளும் அமர, எதிர் பாரத விதமாக, என் குருஞ்செய்தியை பெற்ற என் அன்புத் தோழி என்னருகில்...

திரைப்படம் திரை இடப்பட, என்னை ஆர்வம், எதிர்ப்பார்ப்பு குடிக்கொண்டது. தோழியின் முகத்திலோ, செயலிலோ ஒரு மாற்றமும் தென்படவில்லை. என்னவென்று நான் நினைக்க?


தோழியிடம், நான் என் குருஞ்செய்தியை நினைவுப்படுத்த...

அவளின் முகத்தில், மெல்லிய புன்னகை, நான் மிகவும் ரசிக்கும் புன்னகை. அவளுக்கே உரிய அந்த அன்புச் சிரிப்புடன், அவள் தன் கைகளால், என் கைகளை பற்றிக்கொள்ள, திரையிலும் கதையின் நாயகி ஒரு படகோட்டி வசம் தன் கரங்களை நீட்டும் காட்சி...

ஆனந்தமான அதிர்ச்சி என்னுள், அவற்றை நான் ரசித்துக் கொண்டு...

சின்ன சின்ன தருணங்கள் தானே வாழ்க்கையின் ரசனையை கூட்டுகிறது, அப்படி ஒரு தருணம் தான் இது. ஆம், என் வாழ்வின் மிக சந்தோசமான, மரண நொடியிலும் நினைவில் திளைக்கும் தருணங்கள், மணித்துளிகள் இவை...

அந்த பிஞ்சுக் கைகளின் அரவணைப்பு, அன்புக்காகதான் நான் காத்துக் கிடந்தேன்.

உயிரின் பாசமெல்லாம் அந்த ஸ்பரிசத்தில் குவிந்து இருந்தது.

விடியும் வரை தெரியாது, நடந்தது கனவென்று, சந்தோசமும் அதுப்போலதான். அதை அனுபவிக்கும் போது தெரியாது.

மணித்துளிகள் நீண்டுகொண்டிருக்க, அனைவரும் திரையில் ஒன்றி இருந்தோம்.
என் கரமும், என் தோழியின் கரமும், இணைந்திருக்க அவள் தன் கைக்குட்டையால் எங்களின் இருவரின் வியர்வைத் துளிகளையும் மிக வாஞ்சையுடன் துடைத்து விட்டாள்.

நான், கல்லூரி பருவத்தில் என் கூடைபந்தட்ட பயிற்சியை முடித்துவிட்டு மிக சோர்வாக வீட்டினுள் நுழைந்து அம்மாவின் மடியினில் படுத்துக் கிடப்பேன், அப்போது, அம்மா மிக வாஞ்சையுடன் தன் புடவை முந்தானையால் என் முகத்தில் உள்ள வியர்வைத் துளிகளை துடைத்து விடுவாள்.

அதே நிகழ்வு, இப்போது நடந்து கொண்டிருந்தது.
நான், என்னை படைத்தவனிடம் இந்த அன்புக்கு, நிகழ்வுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன், நன்றியும் கூறினனேன்.

சந்தோஷம் நீண்டு கொண்டிருக்க, நண்பர்களுக்கு இடையில் குழந்தைத்தனமான செல்ல சண்டைகள்... மன இறுக்கம்.
எங்களின் கரம் பிரிய.... பிரிந்தது.
மீண்டும், அனைவரும் திரைப்படத்தில் கவனத்தை செலுத்த, என்னால் அச்செயலை செய்ய முடியவில்லை.

என் என்னோட்டதில் பல கேள்விகள்? விடை தெரியாமல்...

இடைவேளை, சரி இடைவேளைக்கு பிறகாவது, கரங்கள் இணையும் அன்று நம்பிக்கையில் காத்துக் கிடந்தேன்.

காலம் தானே, எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து. மணித்துளிகளின் தொகுப்புதானே காலம். மணித்துளிகள் ஓட காத்துக் கிடந்தேன்.


இடைவேளையின் போது, டெல்லியில் இருந்து என் மாணவ நண்பனின் குருஞ்செய்தி என் கைப்பேசியை வந்து அடைந்தது.

குருஞ்செய்தி:
Kamal sir, Sorry as committed I couldn’t get you shadi by today. However, I make sure that you get it on or before 10 Aug.
ஆம், அவனிடம் என் அம்மாவுக்கும், தோழிகளுக்கும் அங்கு மட்டுமே கிடைக்கும் சேலை வாங்கி அனுப்பும் மாறு கேட்டுக்கொண்டிருந்தேன்.


ஏமாற்றம்... ஏமாற்றம்...

இந்த சின்ன ஏமாற்றத்தினை, தோழர், தோழிகளின் அருகாமை மங்கச் செய்து கொண்டிருந்தது.

நானும் அவளின் பிஞ்சுக் கைகளின் அரவணைப்பு, அன்புக்காக ஏங்கிக்கிடந்தேன்.
இடைவேளை முடிந்து, திரைப்படம் திரையிடப்பட, அனைவரும் அமர, எனக்கோ பெரிய ஏமாற்றம். என் தோழியின் அருகில் எங்கள் நட்புக் குழுவின் மற்றுறொரு நண்பன். அவர்களின் சந்தோஷத்தை களைக்க மனம் முன்வரவில்லை...

திரையில் என் கவனம் செல்லவில்லை, மணித்துளிகள் கரைந்து கொண்டிருந்து...
சிறிது நேரத்திற்கு பிறகு, திரையில் என் கவனம், கண்களை ஈர்த்தது...
கதையின் நாயகி, கதையின் நாயகனின் கை விரல்களை பெரிய மூங்கில் கொண்டு அடிக்கும் காட்சி.

வேதனையான அதிர்ச்சி என்னுள், கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது, கட்டுப்படுத்திக் கொண்டேன், யாரும் அறியாமல்.

திரைப்படம் முடிவு பெற...

அனைவரும், மூன்று சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் ஏறி அமர, என் அன்புத் தோழியின் ஆசையை நிறைவேற்றவே, நான் மட்டும் முன் இருக்கையில் ஏறி அமந்தேன்.

அவளுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் நான் மறக்கவில்லை...!!!

அனைவரும், ஓர் உணவகம் சென்று அடைந்தோம், சந்தோஷமாக, கிண்டலுடன் மதிய உணவை உட்கொண்டோம்.
பின், நண்பனின் விருப்படி கோவில் செல்ல அனைவரும் ஆயத்தமாக, என்னால், அவர்களுடன் இணைய முடியவில்லை – மனதளவில்.
காரணம்: நான். என்னுடைய எதிர்ப்பார்ப்புகள், ஆசைகள், ஏமாற்றங்கள், நான் எவ்வளவு கேவலமானவன், சுயநலக்காரன்...

அவர்களின் மகிழ்ச்சி தொடர விரும்பினேன். அவர்கள் என் நண்பர்கள் அல்லவா? அவர்களின் மகிழ்ச்சியில் நான் திளைக்க விரும்பினனேன்.
ஆகையால், நான், நண்பனிடம்...

“நீங்க proceed பண்ணுங்க, நா rest எடுக்க போறேன்.”

அவனின் முகம் வாடியது, என்னால் தாங்கமுடியவில்லை, இதயம் கணத்தது. என் மீது வெறுப்பு, கோபம் என்னுடைய வார்த்தை என்னை நெருஞ்சி முள்ளாய் இதயத்தில் குத்தியது.

“வாடா, எல்லோரும் சேர்ந்து போவம், இல்லைனா யாரும் போக வேண்டாம்” என்றான் தோழன்.

நான், என்னை சீர்ப்படுத்திக் கொண்டேன். அனைவரும் ஒன்றாக கோவில் சென்று அடைந்து, மிக நிதனாமாக தரிசனம் காணப் பெற்றோம். தரிசனம் முடிந்து அனைவரும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாடிப்படியினில் அமர்ந்தோம்.

நான் மேலே அமர்ந்திருக்க என் காலடியில் என் தோழி அமர, நான் மனம் பேதலித்து போனேன். ஆம், அவள் அமர்ந்த விதம் என் அன்பு அக்காவை என் கண் முன் நிறுத்தியது.
நிகழ் காலத்தினுள் என்னால் சங்கமிக்க முடியவில்லை. என் எண்ணத்தின் ஓட்டத்தை நான் வார்த்தைகளால் கூறாமல் இருபினும், என் தோழி அதை கண்டுகொண்டாள். அவள் என் தோழி அல்லவா?

உடனே எழுந்தோம், கோவிலை விட்டு வெளி வந்தோம், அனைவரும் கை கோர்த்து நடக்க, நான் மட்டும், தனித்து விடப்பட்டேன், தனித்து இருந்தேன்.

புரிந்தது, எனது செயல்கள் என் நண்பர்களை காயப்படுத்தும் என்று, இருப்பினும் மாற்ற தவறினனேன். நான் எவ்வளவு கேவலமானவன், சுயநலக்காரன்...

பேரூந்து பிடித்து அனைவரும் அவர் அவர் தங்கும் இடம் வந்து அடைந்தோம்.
அதன் பிறகு, பல முறை நண்பர்கள் அனைவரும் சங்கமித்தோம், கைகள் கோர்த்து நடந்தார்கள், என்ன எனக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்க தவறியது. அதனால் என்ன? நான் காத்திருக்க தயாராகவே இருந்தேன்.... காத்தும் கிடந்தேன்.


28 August 2010, சனிக்கிழமை:

சரியாக ஒரு மாதம், மூன்று நாட்கள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பும் அமைந்தது; என் தோழி என் கரங்களை பிடித்து, இணைத்து, நடந்து சென்றாள்... சிறிது தூரம், சில மணித்துளிகள்...மூன்று நிமிடங்கள்....

அந்த மணித் துளிகளுக்காதானே, மூன்று நிமிடங்களுக்காதானே 33 நாட்கள் காத்துக் கிடந்தேன். என் மனதில் சந்தோஷம், இன்பம், மகிழ்ச்சி.... நான் எவ்வளவு கேவலமானவன், சுயநலக்காரன்...

சில மணித்துளிகளில் எங்கள் கரங்கள் பிரிந்தது. தங்கும் இடங்களுக்கு சென்று அடைய மூன்று சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அனைவரும் அமர, தோழியின் விருப்பத்தினை நிறைவேற்றும் கடமை என்னிடம்,

அவளுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் நான் மறக்கவில்லை...!!!

நான் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தேன்.

அனைவரும் மகிழ்ச்சியாக அவர் அவர் தங்கும் இடங்கள் வந்து அடைந்தோம். என் அறையை நான் அடைந்த பிறகு, நடந்த நிகழ்வுகளை திரும்பி பார்க்க...

எங்கோ படித்த வாசகம் என் நினைவில் வந்து ஓடியது...

“நீ தேடும் ஒருவர் உன் தேடலில் கிடைபதில்லை, உன்னைத் தேடும் ஒருவரையோ நீ திரும்பி கூட பார்ப்பதில்லை – இதுதான் வாழ்க்கை “

அதே சமயம் என் செவிகளை வந்து அடைந்த பாடல் வரிகள்...
(கவி நான் செய்த சிறு திருத்தத்திற்கு மன்னிப்பாராக...)

"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாள் இல்லையே...
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் (நண்பர்கள்) மனம் போலே பாடுவேன் (நான் இருப்பேன்) கண்ணே...
என் சோகம் என்னோடு தான்...”


ஆம், எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை.....

No comments:

Post a Comment