Monday, April 26, 2010

எனக்கு நட்பு, தோழமை, சிநேகிதம் பிடிக்கும்...!!!




நட்பு, நண்பர்கள்...
தோழமை, தோழர்கள்...
சிநேகிதம், சிநேகிதர்கள்...
எனக்கு நட்பு, தோழமை, சிநேகிதம் பிடிக்கும்...!!!

அலுவல் தந்த அசதி, நிறைவான தூக்கம் வேண்டி தூங்க சென்றேன்... புரண்டு படுத்தேன்... மறுநாள் அலுவலக பணிகள் என் கண் முன்...

காலைப் பொழுது தன்னுள் பல பொக்கிஷங்களை, சுவாரசியங்களை, எதிர்ப்பார்ப்புகளை, இன்பங்களை, துன்பங்களை, அடக்கிக் கொண்டு இனிதாய் மலர, அலுவலகம் செல்ல வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மின் அஞ்சல் அனுப்ப வேண்டும், என்கிற இயந்திரத்தனமான எண்ணங்களோடு கண்கள் விழிக்க...

கைப்பேசி தன் பணியை தொடங்கியது. சிணுங்கியது.

"டேய் கமல், ஈவ்னிங் 6 மணிக்கு பெசன்ட் நகர் பீச் வாடா , நம்ம பிரிஎண்ட்ஸ் எல்லோரும் வாராங்க " என்றாள் மிக உரிமையோடும், அன்போடும், புத்துணர்ச்சியோடும் என் தோழி.

நான்: " ஏன்? என்ன விஷேசம்? "

இடைமறித்து அவள் : " வாடா, காரணம் சொன்னால்தான் வருவியா!?. கரெக்டா, கவனமா வந்து சேரு".

அவள் கூறிய விதம், உரிமை கொண்ட விதம், அன்பு கொண்ட விதம், என் தாயை நினைவுப் படுத்தியது.

அவளுடய புத்துணர்ச்சி என்னையும் தொற்றிக்கொள்ள, வழக்கம் போல் இல்லாமல், என் ரயில் பயணம் ரசிப்புத்தன்மையுடன் அமைந்தது.
கைக்குழந்தையின் புன்சிரிப்பு, உடல் ஊனமுற்றவரின் தன்னம்பிக்கை, கல்லூரி மாணவர்களின் கிண்டல் பேச்சுக்கள், வேலை இல்லா பட்டதாரியின் எதிர்பார்ப்பு அனைத்தும், என்னை உற்சாகப்படுத்தியது. மிக சீக்கிரமாக அலுவலகம் சென்று அடைந்தேன்.

என் அலுவல்களை செய்ய முற்பட்டேன், என்னுடைய உற்சாகம் என் அலுவலக நண்பர்களையும் தொற்றிக்கொள்ள வேலைகள் அனைத்தும் கொண்டாட்டமாக மாறியது. எல்லாம் நட்பு, நண்பர்களால் விளைந்த செயல்.

மாலை 6 மணி, பெசன்ட் நகர் பீச், நண்பர்கள் அனைவரும் சங்கமிக்க, நட்பு மிளிர, சூரியன் பின் வாங்கியது.
கடல் அலை ஆர்பரித்தது, எங்கள் நட்பு கூட்டணியுடன் போட்டியிட்டது. பாவம், முடியாமல் கடல் அலையும் பின் வாங்கியது.

அனைவரும், ஓர் உணவகத்தில் வட்டமாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். நட்பு எவ்வித தடைகளையும், ஆச்சாரங்களையும் பார்ப்பதில்லை. ஒருவர், மற்ற நண்பர்களின் எச்சில் தட்டுகளில் இருந்த உணவை மிக உரிமையோடு எடுத்து உட்கொண்டோம்.
எனக்கு என் பள்ளிகூட, கல்லூரி வாழ்க்கை நினைவில் தோன்றியது.

பேரூந்தில் அணைத்து நண்பர்களும் சேர்ந்து அமர, நானும் என்னுடைய மற்றொரு தோழியும் உட்கார இடம் தேடிப் பார்க்க...
அப்போது, எங்கள் சமவயதொத்த ஒருவன் எங்களுக்கு இடம் அளித்தான். அவன், எங்கள் நட்பை புரிந்து கொண்ட விதம், மதித்த விதம், எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மேலும், எங்களின் செயல் அவனது நண்பர்களை நினைவூட்டியது போலும், அவனது கண்களில் உள்ள ஏக்கம் அதைப் பறைசாற்றியது.


வீடு வந்து சேர்தேன், அலுவல் தந்த அசதி, நண்பர்கள் தந்த அளவற்ற மகிழ்ச்சி, மனதை மென்மையாக்கிருந்தது.
மன மகிழ்ச்சியோடும், நிறைவுடனும், நிறைவான தூக்கம் வேண்டி, தூங்க சென்றேன்... தூங்கினனேன். தூங்கிக் கொண்டிருகிறேன்........நட்புடன்!!!

Friday, April 23, 2010

எண்ணங்கள்...!!!


அன்பு தோழர்களே...

இனிய நிகழ்வுடன் என்னுள் திளைக்கின்ற தோழர்களுக்கு....



சித்திரை மாதம், ஞாயிற்றுக் கிழமை, மதிய நேரம், சுட்டெரிக்கும் வெயில், வெப்பத்தின் கடுமை, இருபினும் என் முகத்தில் ஓர் குளுமை, புத்துணர்ச்சி, சந்தோஷம், காரணம்!? நண்பர்கள்... நண்பர்கள்... நண்பர்கள்...

தோழியின் பிறந்தநாள் நினைவாக கேக் வெட்ட வேண்டும் என்ற இனிய நிகழ்வோடு ஆரம்பானது எங்கள் நட்பின் கூட்டணி, ஓர் பூங்காவில். கிண்டல் பேச்சுக்கள், வேடிக்கையான சீண்டல்கள், பரிசுகள் பரிமாற்றம், அன்பின் பொழிவு, நண்பர்களுடன் சேர்ந்து அந்த நில ஒளியில் உட்கொண்ட கூடஞ்ச்சொறு, நட்பு தருவித்த மகிழ்ச்சி, சாதாரண ஞாயிற்றுக் கிழமையை என்றும் பசுமையான அசாதாரமான நாளாக மாற்றியது.

எங்கும் நட்பு, நண்பர்கள், நண்பர்கள் தருவித்த மகிழ்ச்சி. அனைவரும் மிக மகிழ்ச்சியாக விடை பெற, நான் மட்டும் தனியாக...

என் என்னோடத்தில் சில கேள்விகள்?
நம் நட்பு இதே போன்று மாறாத நட்புடன் எதிர்காலத்தில் திளைக்குமா?
நம் ஆண்-பெண் பால் அற்ற நம் நட்பைப் பற்றி மற்றவர்களின் கருத்து?
என் படைப்பின் பொருள் இதுவோ?
இதே நட்பின் மகிழ்வோடு என் இறப்பு நிகழ்தால் என்ன?

அப்போது, என்னை கடந்து சென்ற மூன்று சக்கர வாகனத்தின் வாசகம் என் என்னோட்டதை இடறியது...

வாசகம்: இதுவும் கடந்து போகும்...!!!

Monday, April 19, 2010

உழைப்பு - என் கண்ணோட்டத்தில்...!!!

கடுங்குளிரில் அமர்ந்து, இரவெல்லாம் மெழுகுவர்த்தி ஒளியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த ரூசோ சாதாரண உழைப்பால் அல்ல; உழைப்பின் சிகரம். உழைப்பு... உழைப்பு, உழைப்பதே உன் குறிக்கோளாய் இருக்கட்டும்.


"மேதைதனத்தின் தாயே உழைப்புதான்" என்கிறார் பர்கர்.
"காலத்தை வீணாக்குவதற்கு கடிகாரம் என்னை கண்டிக்கிறது" என்கிறார் ஷேக்ஸ்பியர்.

உழைப்பின் சிறப்புக்கு காலம் ஓர் வரைகோல். காலத்தின் சிறப்பை உணர்த்த ஓர் மேதை சொன்னான் "நாளை வாழ்வேன் என்பவன் அறிவிலி, இன்று வாழ எண்ணுவது கூடக் காலம் கடந்த எண்ணமே, நேற்றே வாழ்த் தொடங்கியவன் தான் அறிவாளி", என்று, நம் வலிமை, நாம் ஈடுக்கொடுக்கும் எதிர்ப்பின் அளவு விகிதத்தில் தான் இருக்கிறது. ஆதலின் வலிமையை விலை பேசும் கடமைக்கு செவி சாய்த்து, உரிய நேரத்தில் தொடங்கி, உன்னத உழைப்பால் உயர்வான வாழ்வினைப் பெறலாம்...!!!