Sunday, March 7, 2010

படித்ததில் பிடித்தது...!!! - 3

படித்ததில் பிடித்தது...!!!

புத்தகம்: குருவாசகம்
வெளியீடு: ஆனந்த விகடன்
ஆசிரியர்: சுபா

1. தேடல் உங்களுக்குள் தீவிரமாகும் போது, உங்கள் இதயம் உண்மையாகவே கதறும்
போது, அறியாமையின் வலி உண்மையில் அதிகம் ஆகும்போது, வலியை உங்களால்
தாங்கமுடியாதபோது... கிடைக்கிறார் குரு...!

2. உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக
உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்பதுதான் முக்கியம்...!

3. உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை.
உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று...!

4. தீவிரமாய் உழைபவனுக்குதான் ஓய்வின் உண்மையான அர்த்தம் புரியும்...!

5. மற்றொரு மனிதனைக் கொல்வதுதான் வன்முறை என்று நினைக்காதீர்கள். நீங்கள் உயிர்
வாழ்வதற்கு அவசியமான அளவுக்கு மேல் எந்த உயிர் அழிக்கபடலும் அதுவும்
வன்முறையே...!

No comments:

Post a Comment