Tuesday, March 23, 2010

நான் செய்யும் செயல்


படித்து கொண்டிருக்கும் புத்தகம்: தண்ணீர் தேசம்
ஆசிரியர்: கவிஞர் வைரமுத்து

இப்புத்தகத்தை பற்றிய என் எண்ணங்கள் விரைவில்... எழுத்துகளாக இந்த இணையத்தில்...

Sunday, March 7, 2010

படித்ததில் பிடித்தது...!!! - 3

படித்ததில் பிடித்தது...!!!

புத்தகம்: குருவாசகம்
வெளியீடு: ஆனந்த விகடன்
ஆசிரியர்: சுபா

1. தேடல் உங்களுக்குள் தீவிரமாகும் போது, உங்கள் இதயம் உண்மையாகவே கதறும்
போது, அறியாமையின் வலி உண்மையில் அதிகம் ஆகும்போது, வலியை உங்களால்
தாங்கமுடியாதபோது... கிடைக்கிறார் குரு...!

2. உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக
உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்பதுதான் முக்கியம்...!

3. உங்களால் இயலாத ஒன்றைச் செய்யவில்லை எனில் ஒரு பிரச்னையும் இல்லை.
உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று...!

4. தீவிரமாய் உழைபவனுக்குதான் ஓய்வின் உண்மையான அர்த்தம் புரியும்...!

5. மற்றொரு மனிதனைக் கொல்வதுதான் வன்முறை என்று நினைக்காதீர்கள். நீங்கள் உயிர்
வாழ்வதற்கு அவசியமான அளவுக்கு மேல் எந்த உயிர் அழிக்கபடலும் அதுவும்
வன்முறையே...!

Friday, March 5, 2010

படித்ததில் பிடித்தது...!!! - 2

படித்ததில் பிடித்தது...!!!


மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நினைவுகளை.என்னை எரித்தாலும் மிஞ்சும் உண் நினைவுகள்...!!!


பொறுத்தது போதும் பொங்கி எழு - ஒரு
புழுவென வாழ்ந்தது போதும்
வெறியர்கள் ஆட்சி வீழ்ந்திடவே - நீ
எரிமலையாகவே மாறிவிடு!!!


கொலை வாளினை எடடா
கொடியோர் செயல் அறவே...
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை
வேரோடு சாய்வோம் - பாரதிதாசன்


சோர்ந்து விட்ட மனிதன்
தனக்குத் தானே பகைவன்;
துணிந்து விட்ட மனிதன்
சாவுக்கு பகைவன்.


பயந்தவனக்கு உலகம் வழிபாட்டுப் பொருள்;
துணிந்தவன் உலகிற்கு வழிபாட்டுப் பொருள்...!



பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்:
1. மானம் 2. குலம் 3. உயர்ச்சி 4. கல்வி 5. வன்மை
6. அறிவுடைமை 7. தானம் 8. தவம் 9. தாளாண்மை 10. காமுறுதல்
- ஔவையார்