Monday, June 28, 2010

படித்ததில் கவர்நதது....!!!

பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்.....


கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல் - சுவாமி விவேகானந்தர்.



"மற்றவர்களுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட நான் நிமிர்ந்து நின்றே சாவேன்" - சே குவேரா.


எப்பொழுதும் மிக எளிதானதாகவே இருந்திருக்கின்றது இளகிய மனங்களை ஏமாறச் செய்வதென்பது......

No comments:

Post a Comment