படித்ததில் பிடித்தது...!!!
நேற்றைய வரலாறு தெரியாது போனால், இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை.
புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம், புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது...!!!
ஆழ்ந்த சிந்தனை - ...பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதி இன் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்...!
இலட்சியத்தால் ஒன்றுபட்ட, எழுச்சி கொண்ட, மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது...! இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி...!
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே...! - சே
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை, சாட்சி இல்லாத மரணத்துக்குச் சமம்...!!!