
ஓய்வு நாளின் இனிமையான பின் இரவு, தோழியுடன் தொலைப்பேசி உரையாடல், மனதில் இன்பத்தை இறைத்து இருந்தது. அந்த இன்பம் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்னும் பேராசை என் மனதில். அவளை பார்க்க வேண்டும் என்னும் எண்ணம்.
அவளிடம் " உன்ன பார்க்கணும் போல இருக்கு, நாளைக்கு பார்க்க முடியுமா?"
அவள், அவளுக்கே உரிய மென்மையுடன், அன்புடன், " வாடா, நாளைக்கு evening பார்க்கலாம்".
அவளுடைய வார்த்தைகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.
பின்பும் எங்களுடைய தொலைப்பேசி உரையாடல் தொடர்ந்தது.
அந்த நாளின் மாலை நேரத்தை மாற்ற முடியாத நாளாக மாற்ற நினைத்தேன். அவளுடன் பல விஷயங்களை மனதார பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
அவளை பார்க்கும் நொடிகளை நினைத்து பார்க்கும் போது, மனதில் இன்பம் குடிகொண்டது. அந்த இன்பம் என் காலை பொழுதை மிக இன்பமாக மாற்றி இருந்தது.
வெயிலின் கடுமை, வியர்வைத் துளிகள், ரயில் பயணம், சக பயணிகளின் செயல்கள், அலுவலக பணிகள், எல்லாம்.. எல்லாமே இன்பம் அளித்தது. இன்பம் அளித்துக்கொண்டு இருந்தது.
என் மனம் துள்ளி குதித்தது, காரணம், என் தோழியை சந்திக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
எனக்கு ஆச்சர்யம், ஒருவரின் சந்திப்பு இவ்வளவு சந்தோஷத்தை அளிக்க முடியுமா? - "முடியும்" என்றே பதில் அளித்தது என் மனம்.
கைபேசி சிணுங்கியது. தோழியின் குறுந்தகவல் - "Kamal. I'm sorry. I could not come today. Meet you on some other day".
என் முகத்தில், புன்ருவல் - விரக்தியுடன்.
அலுவலக பணிகள் பாரமானது, வியர்வைத் துளிகள், ரயில் பயணம், சக பயணிகளின் செயல்கள் அனைத்தும் இயந்திரத்தனமாய் தெரிந்தது.
காலைப் பொழுதில் சந்தோஷத்தை அளித்த அச்செயல்கள்... இப்போது!?
முன் இரவில் அவளுடைய தொலைப்பேசி அழைப்பை எதிர்பார்த்து காத்துகொன்டிருந்தேன்...
" எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்குமாம் " - எங்கோ படித்த வாசகம் என் நினைவில் தோன்றியது.
சிந்தித்தேன், செயல்கள் அனைத்தும் ஒன்றே, எல்லாம் நாம் பார்க்கும் விதத்தில்...
" If you understand, things are just as they are; if you do not understand, things are just as they are..." ஜென் பழமொழி.
மேலும்... " மறக்க படும் அன்பும், மறுக்க படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது...!!! "